About the 63 Nayanars
- A Brief Summary.. (An English version can be found below)

1. திருநீலகண்ட நாயனார்/Tiru Neelakanta Nayanar
(முதுமை காலத்தில், மனைவியாருடன் கோல் பிடித்து, குளத்தில் முழுகி, இளமை பெற்றார்.)
2.இயற்பகை நாயனார்/Iyarpahai Nayanar
சிவனடியாராக வந்த சிவனிடம், தன்னுடைய மனைவியை , முழுநம்பிகையுடன் அனுப்பியவர்.
3.இளையான்குடிமாற நாயனார்/Ilayankudi Mara Nayanar
நடு இரவில், சிவனாடியார் வேடத்தில் வந்த சிவபிரானுக்காக, நெல் அறுத்தவர். தன்னுடைய , வீட்டு கூரையையும் விறகாக ஆக்கி, சிவனடியாருக்கு உணவு தந்தவர்.
4.மெய்ப்பொருளார்/Maiporul Nayanar
தன்னுடைய பகைவன், பொலி சிவவேடம் பூண்டு தன்னைக் கொன்றான். இருப்பினும், சாகும் தறுவாயிலும், சிவவேடத்திற்கு மரியாதைத் தந்து, பகைவனின் உயிரைக் காப்பாற்றியவர்
5.விறல்மிண்டர்/Viralminda Nayanar
சிவ பகதர்களை வணங்காத காரணத்தினால், சுந்தர நாயனாரைக் கடிந்து ஏசியவர்.
6.அமர்நீதியார்/Amaraneedi Nayanar
சிவனடியாராக வந்த சிவனின் கோவணம் தொலைந்துப் போக, ஈடாக , தன்னுடைய சொத்தையும், குடும்பத்தையும் ஈடாக தந்தவர்
7.எறிபத்தர்/Eripatha Nayanar
சிவபக்தரின் பூஜைக்குரிய பூவை எறிந்த மன்னனின் யானையை கொன்றவர். பின், தவறு செய்ததாக எண்ணிய மன்னன், சிவபக்தன் என்று உணந்தவுடன், தன் கழுத்தை வெட்ட துணிந்தவர்.
8.ஏனாதிநாதர்/Enadinatha Nayanar
கொல்ல வந்த பகைவனின் நெற்றியில் திருநீறு இருந்ததையறிந்து, பகைவனைக் கொல்லாமல், தான் உயிர் இழந்தவர்.
9.கண்ணப்பர்/Kannappa Nayanar
பக்தியில், சிவனுக்காக, இரு கண்களையும் தோண்டி எடுத்தவர். அன்பு பெருக்கால், மாமிசத்தையும் நெய்வைத்தியமாய் இறைவருக்குப் படைத்தவர்.
10.குங்கிவியக்கலயர்/Kungiliya Kalaya Nayanar
சாய்ந்த லிங்கத்தை, தான் கழுத்தில் கயிறு கட்டி இழுத்தவர். வறுமையில் வாடினாலும், மனைவி கொடுத்த தாலியை விற்று, உணவு வாங்காமல், சிவ பூஜைக்காக தூபம் ஏற்றியவர்.
11.மானக்கஞ்சறார்/Manakanchara Nayanar
மறுநாள், தன் மகளுக்கு கல்யாணம் என்றாலும், சிவனடியார் கேட்க, மகளின் அழகிய கூந்தலை வெட்டியவர்.
12.அரிவாட்டாயர்/Arivattaya Nayanar
சிவபூஜைக்குரிய பொருட்கள் கீழே விழுந்ததால், மாறாக, தன்னுடைய கழுத்தை வெட்ட துணிந்தவர்.
13.ஆனாயர்/Anaya Nayanar
புல்லாங்குழல் ஓசையில், சிவ பக்தியை வெளிப்படுத்தியவர்.
14.மூர்த்தி/Murthi Nayanar
சந்தனக் கட்டைகள் கிடைக்காது, தன்னுடைய முழங்கையைக் கல்லில் தேய்த்தவர். நாடாளும் பொறுப்பு வந்தாலும், திருநீறு, உருத்திராக்கம், சடைமூடியை தன்னுடைய சின்னமாகக் கொண்டவர்
15.முருகர்/Muruga Nayanar
16.உருத்திரபசுபதி/Rudra Pasupathi Nayanar
கழுத்தளவு நீரில், பகல் இரவு பாராமல், ருத்ரம் ஓதியவர்.
17.திருநாளைப்போவார்( நந்தனார்)/Tiru Nalai Povar Nayanar
தாழ்ந்த குலமென்பதால், கோயிலில் நுழையாமல் வெளி நின்று சிவனை வணங்குவார். தன் தரிசனத்தை மறைத்த நந்தியை நகர செய்தவர். சிதம்பரம் திருத்தலம் போக வெகு ஆவல் கொண்டவர்.
18.திருக்குறிப்புத் தொண்டர்/Tiru Kurippu Thonda Nayanar
சிவபிரான் வேடமிட்ட சிவனின் அழுக்கு துணியைக் கழுவியவர். ஆனால், குறித்த நேரத்தில் தன் பணியை செய்ய இயலாததால், தன் தலையை கல்லில் மோதியவர்.
19.சண்டேசுர நாயனார்/Chandesvara Nayanar
சிவலிங்கத்திற்கு பால் அபிஜேகம் செய்தவர். பாற்குடத்தை காலால் உடைத்த தந்தையின் காலை வெட்டியவர்.
20.திருநாவுக்கரசர் சுவாமிகள்/Tiru-Navukkarasar Nayanar
தேவாரம் பாடி, சிவன் அருளை சிறப்பித்தவர். பற்பல அற்புதங்கள் மூலம், சிவனருளைக் கண்முன் காட்டியவர்.
21.குலச்சிறையார்/Kulacchirai Nayanar
பாண்டிய நாட்டின் அமைச்சராக இருந்து சைவத்தைக் காத்தவர்.
22.பெருமிழலைக் குறும்பர்/Perumizhalai Kurumba Nayanar
சுந்தருடன் கயிலை சென்றவர்.
23.பேயார் [ காரைக்கால் அம்மையார்]/Karaikal Ammaiyar
இறைவனின் அருளால் , கணவருக்காக மாம்பழம் வரவழைத்தாள். பின், இறைவனையே துடிக்க, பேய் வடிவம் எடுத்தவர்.
24.அப்பூதி அடிகள்/Appuddi Nayanar
திருநாவுக்கரசரின் பெயரில் தொண்டு புரிந்தவர். தன் மகன் பாம்பால்கடிக்கப்பட்டாலும், திருநாவுக்கரசரின் உணவு உபசரிப்பு பாதிக்கப்படும் என்ற அச்சத்தால், இறந்த மகனை மறைத்துவைத்தவர். பின், இறந்த மகன், சிவன் அருளால் உயிர் பெற்றான்.
25.திருநீலநக்கர்/Tiruneelanakka Nayanar
திருச்சாத்தமங்கை அவயந்தி ஆலயத்தில், சிவலிங்கத்தின் மீது உள்ள சிலந்தியை ஊதிய மனைவியை கடிந்து ஏசியவர்.
26.நமிநந்தி அடிகள்/Nami Nandi Adigal
தண்ணீரால் விளக்கு ஏற்றியவர்
27.திருஞானசம்பந்தர்/Tiru Jnana Sambandar
ஞான குழந்தை.
28.ஏயர்கோன் கலிக்காமர்/Eyarkon Kalikama Nayanar
இறைவனை, தூதுதவராய் அனுப்பிய சுந்தர நாயனாரிடம் கடிந்து பேசியதால், சூலைநொய் பெற்றார். பின், சிவன் அருளால், நொய் நீக்கப்பட்டது.
29.திருமூலர்/Tiru Mula Nayanar
திருமந்திரம் பாடியவர்.
30.தண்டி அடிகள்/Dandi Adigal Nayanar
குருடாக இருந்தாலும், சமுதாய நொக்கம் கொண்டு, குளம் தோண்டியவர். சிவ அருளால், கண் பார்வை மீண்டும் பெற்றவர்.
31.மூர்க்கர்/Murkha Nayanar
சூதாடி, வரும் வருமானத்தில் சிவ பூஜை நடத்தியவர்
32.சோமாசிமாறர்/Somasira Nayanar
நிறைய யாகம் நடத்தி, சிவ பூஜை செய்தவர். சுந்தரின் நண்பர்.
33.சாக்கியர்/Sakkiya Nayanar
அன்பால், சிவ லிங்கத்திற்கு கல் எறிந்தவர்.
34.சிறப்புலி/Sirappuli Nayanar
சிவ பூஜையை தவறாமல் செய்தவர்.
35.சிறுத்தொண்டர்/Siruthonda Nayanar
பைரவ அடியாராய் வந்த சிவனுக்காக, தன் மகனையே வெட்டி கறி சமைக்க துணிந்தவர்.
36.சேரமான் பெருமாள்/ Cheraman Perumal Nayanar
சுந்தரின் நண்பர். சிவ பூஜையைத் தவறாமல் செய்பவர்.
37.கணநாதர்/Gananatha Nayanar
சிவ பூஜையை அதிக பக்தியுடன் செய்வார்.
38.கூற்றுவர்/Kootruva Nayanar
நாடாள முடிசூட விரும்பியவர். ஆனால், வாய்ப்பு கிடைக்காததால், தன் சிந்தையில், சிவனை முடி சூட்டி தந்ததாக எண்ணியவர்.
39.புகழ்ச்சோழர்/Pugal Chola Nayanar
எறிபத்தர், தவறு செய்த யானையை கொன்றுவித்தார் என்று அறிந்து, சிவனை நினைத்து, தன் உயிரை விட நினைத்தார்.
40.நரசிங்க முனையரையர்/Narasinga Muniyaraiyar
சுந்தரமூர்த்தி நாயனாரை வளர்த்தவர்.
41.அதிபத்தர்/Adipattha Nayanar
வலையில் கிடைக்கும் முதல் மீனை சிவனை நினைத்து, ஆற்றில் விடுபவர். அன்று, ஒரு பொன் மீன் கிடைத்தாலும், சிவனுக்காக ஆற்றில் விட்டு விட்டார்.
42.கலிக்கம்பர்/Kalikamba Nayanar
முன்பு வேலைக்காரனாக இருந்தவன் சிவனடியாராய் வந்திட, உபசரிக்க மறுத்த மனைவியின் கையை வெட்டியவர்.
43.கலியர்/Kalia Nayanar
வறுமையில், தன் மனைவியே விற்று விளக்கு ஏற்றினார். எண்ணெய் வாங்க காசு இல்லாத சமயத்தில், தன் இரத்ததால், விளக்கு ஏற்றியவர்.
44.சத்தி/Satti Nayanar
சிவனைப் பற்றி தவறாக பேசியவரின் நாக்கை அறுத்தவர்.
45.ஐயடிகள் காடவர்கோன்/Aiyadigal Kadavarkon Nayanar
மன்னன் பதவியை விட்டு, திருதல யாத்திரை மேற்கொண்டவர்.
46.கணம்புல்லர்/Kanampulla Nayanar
விளக்கு ஏற்றுவதற்கு தடை ஏற்பட்டதால், தன் தலைமுடியை கொண்டு விளக்கு ஏற்றியவர்
47.காரி/Kari Nayanar
காரிக்கோவை என்ற நூல் இயற்றி, வரும் வருமானத்தில் சிவாலயங்களை அமைத்தார்.
48.நின்றசீர் நெடுமாறனார்/Ninra Seer Nedumara Nayanar
திருஞான சம்பந்தாரால், தன்னுடைய நோயும், கூனும் நீக்கப்பெற்று, சைவத்தை வளர்க்கும் அரசராய் வாழ்ந்தவர்.
49.வாயிலார்/Vayilar Nayanar
மனத்தால், சிவனுக்காக கோயில் அமைத்தார்.
50.முனையடுவார்/Munaiyaduvar Nayanar
அரசருக்காக போர் புரிந்து, வரும் வருமானத்தில், அனைவருக்கும் உணவு அளித்தார்.
51.கழற்சிங்க நாயனார் / Kazharsinga Nayanar
சிவ பூஜைக்கு உரிய மலரை முகர்ந்த மனைவியின் கையை வெட்டியவர்.
52.இடங்கழி/Idangazhi Nayanar
அரசனாய் இருந்தாலும், தன்னுடைய நெல் களஞ்சியத்தை, சிவ பூஜைக்கு வாரி தந்தவர்.
53.செருத்துணை/Seruthunai Nayanar
சிவ பூஜைக்குரிய மலரை மோந்த, கழற்சிங்க நாயனாரின் மனைவியின் மூக்கை வெட்டியவர்.
54.புகழ்த்துணை/Pugazh Tunai Nayanar
வறுமை வந்தாலும், கோயிலில் சிவ பூஜையைத் தவறாமல் செய்தவர். பின், ஊரின் பஞ்சத்தைத் தீர்க்க, பொருள் பெற்றார்.
55.கோட்புலி/Kotpuli Nayanar
சிவபூஜைக்குரிய நெல்லை எடுத்த உறவினர்களின் நெல்லை அழித்தவர்.
56.பூசலார்/Pusalar Nayanar
பொருள் இல்லாத்தால், மனத்தில் கோயில் கட்டினார். மன்னன் கட்டிய கற் கோயிலை விட்டு, இறைவன் முதலில் பூசலாரின் மனகோவிலுக்கு வருகை அளித்தார்.
57.மங்கையர்க்கரசியார்/Mangayarkarasiyar
சைவத்தைப் பரப்பிய, பாண்டிய மகாராணி.
58.நேசர்/Nesa Nayanar
எப்பொழுதும், சிவனின் நாமத்தை நினைத்தவர்.
59.கோச்செங்கட் சோழர்/Kochengat Chola Nayanar
முற்பிறவியில், சிலந்தியாய் சிவனை வழிப்பட்டு, மன்னராய் பிறந்தார். பின், மன்னராய், நிறைய சிவ ஆலயங்களைக் கட்டினார்.
60.திருநீலகண்ட யாழ்ப்பாணர்/Tiru Neelakanta Yazhpanar
ஞானசம்பந்தருடன் யாழ் இசையின் மூலம், சிவனைப் போற்றியவர்
61.சடையனார் நாயனார்/Sadaya Nayanar
சுந்தரமூர்த்தி நாயனாரின் தந்தை.
62.இசைஞானியார்/Isaijnaniyar
சுந்தரமூர்த்தி நாயனாரின் அன்னை.
63.சுந்தரமூர்த்தி நாயனார்/Sundaramurthi Nayanar
தேவாரம் பாடியவர்.